நல்லதோர் வீணை செய்தால்

மிக நன்றாக வரையத் தெரிந்துகொண்ட ஓவியன் வரைவதை நிறுத்திக் கொண்டான். கடவுளுக்குக் கொஞ்சம் போர் அடித்து விட்டது. மிக நன்றாக படம் எடுக்கத் தெரிந்த இயக்குநர் ஒருத்தி படம் எடுப்பதை நிறுத்திக்கொண்டாள். கடவுளுக்கு இப்போது கோபமே வந்துவிட்டது. அவரைச் சில கவிஞர்கள் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். சில அரசியல்வாதிகள் பொம்மைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவருக்குத் தேவையெல்லாம் புதிதாக ஒரு

மிக நன்றாக வரையத் தெரிந்துகொண்ட ஓவியன் படம் போடுவதை நிறுத்திக்கொண்டான் என்றே எல்லோரும் சொன்னார்கள். அவனது பழைய படங்கள் எங்கே என்றும் யாருக்கும் தெரியவில்லை. விற்பதற்கு சரக்கில்லாத அவனை கலை விசுவாசிகள் அண்டுவதில்லை. சற்றே நெகிழ்ச்சியான மனநிலையில் முகங்களை, நினைவுகளை, கோடுகளை காகிதத்தில் பதிந்துகொடுக்கிறான். ஆனால் அவன் படம் போடுவதில்லை. ஏனென்றால் படம் போடுவது என்பது

மிக நன்றாகப் படம் எடுக்கத் தெரிந்த இயக்குநர் ஒருத்தி படம் எடுப்பதை நிறுத்திக்கொண்டாள். ஆனால் விமர்சகர்கள் அவளுக்குப் புகழ்மாலைகள் சூட்டத் தொடங்கிவிட்டனர். மக்கள் அவளை வெறுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே அவள் ஒரு படம் எடுத்தாள். திரையிடப்பட்ட அன்று ஒரு நூறு பேர் தியேட்டருக்கு வந்திருந்தனர். படம் தொடங்குவதாக விளக்குகள் அணைந்தபின் திரை ஒளிர்ந்தது. திரையில் வந்திருந்தவர்களின் முகங்களே தோன்றின. அங்கங்கே இருந்த கேமராக்கள் அவர்களையே படம்பிடித்து திரையில் காட்டின. சிலர் ஃபோனைப் பார்க்க தொடங்கினர். சிலர் அரை மணிநேரத்தில் வெளியேறினர். 90ஆவது நிமிடத்தில் படம் முடிந்து விளக்குகள் ஒளிர்ந்தபோது

மிக நன்றாக எழுதத் தெரிந்துகொண்ட எழுத்தாளர்களால் எழுதுவதை நிறுத்த முடிவதேயில்லை. அவர்கள் தங்கள் கணினிகளின் முன் உட்கார்ந்து புனைந்து கொண்டே இருக்கிறார்கள். புனை புனை என்று புனைகிறார்கள். அவர்களை வாசிப்பவர்களும் வாசி வாசி என்று வாசிக்கிறார்கள். உண்மையில் உங்களுக்கெல்லாம் போர் அடிக்காதா? யூட்யூபில் வீடியோ போடுபவர்கள் கூட சமயத்தில் நிறுத்தி விடுகிறார்கள். திடீரென்று ஒருநாள் அவர்களுக்கு கேமராவிடம் என்ன சொல்வதென்று தெரிவதில்லை. உங்களை விட கவிஞர்களே தேவலாம். அவர்களாவது திடீரென்று ஒருநாள் எல்லா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s