கடவுள் பூமிக்கு வந்த கதைகள் – விஷ்ணு நாகர்

கடவுள் ஒருநாள் டில்லியிலிருந்து தனது குழந்தைப்பருவ ஊரான மதுராவுக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்தார். அது ஒரு பேசஞ்சர் ரயில். ரயிலில் இருந்தே அவரைச் சில பண்டிதர்கள் பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். கடவுள் மறுபடி மறுபடி சொல்லிப்பார்த்தார், “இங்க பாருங்க, நா அங்க என் சொந்தக்காரங்களப் பார்க்கப் போறேன். நாங்க முன்னாடி அந்த ஊர்லதான் இருந்தோம்.எனக்கு பண்டிதருங்க எல்லாம் தேவையில்ல.” ஆனால் பண்டிதர்கள் விடுவதாக இல்லை, “நீங்க இப்போ மதுராக்காரர் இல்லயே! உங்களுக்கு நிச்சயம் பண்டிதர் தேவை. நாங்க எல்லா வேலையும் சிறப்பா கம்மி காசுல பண்ணிக்கொடுத்திடுவோம். எல்லா கடவுள் தரிசனமும் காட்டித் தர்றோம். நாங்க அந்த காசு புடுங்குற பண்டிதருங்க மாதிரி கிடையாது பார்த்துக்கோங்க” இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இந்தப் பண்டிதர்கள் விடமாட்டார்கள் என்று புரிந்ததும், கடவுள் தன் உண்மையான சொரூபத்தைக் காட்டினார். இப்போது பண்டிதர்கள் சொன்னார்கள், “இப்போ நாங்க உங்களுக்கு ஆரத்தி எடுத்து பூசை எல்லாம் செய்வோம், ஆனா இது பைசா வாங்குற நேரம். உங்களுக்கு மதுரா ஸ்டேஷன்லயும் பண்டிதருங்க கிடைப்பாங்க. எத்தன பேருக்கு உங்க சொரூபத்த காட்டுவீங்க? அங்க இருக்க பண்டிதருங்க உங்கள ஓசில விட்டுற மாட்டாங்க.” எல்லோரையும் காப்பாறுபவரான கடவுள் பண்டிதர்களுக்குப் பயந்து ரெயிலில் இருந்து குதித்து ஃபதேபுரியில் இருக்கும் தர்மசாலைக்கே திரும்ப வந்துவிட்டார்.

எல்லோருக்கும் இடமுள்ள கித்தான்கள் – அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் குறித்து

எனது கலை என்னையும் உங்களையும் பற்றியது; மனிதம் முழுவதையும், நம்மைப் பிணைக்கும் அன்பு என்ற அழகிய பிணைப்பையும் குறித்தது... எனது கித்தானில் எல்லோருக்கும் இடமிருக்கிறது. நான் கண்டடைந்த, கண்டடையப் போகும் வண்ணங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த மனிதர்களையும், நான் இன்னும் பெறாத நண்பர்களையும் போன்றவை. வண்ணங்கள் எனக்கு மக்களாக, நிலப்பரப்புகளாக, உணர்வுகளாக, மற்றும் தூய்மையான எளிமையான அன்பைப்போன்று இன்பம் தரும் எல்லாமுமாகத் தோன்றுகின்றன. வண்ணங்கள் ஓடி ஒன்றோடொன்று கலந்து உருமாறும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்... ஒரு கலைப் படைப்பின் அதிமுக்கியச் செய்தி அன்புதான், சுற்றிலும் எந்த பூடகமான வட்டங்களும் சதுரங்களும் இல்லாமல், இயற்கையின் தூய இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் கட்டற்ற அன்பு

ஆல்பர்ட் காம்யூ: கொள்ளைநோய் நம் அனைவரின் பிரச்சினை

கொள்ளைநோயோடு போராடும் வழிமுறைகளும், ஃபாசிசத்தோடு போராடும் வழிமுறைகளும் ஒன்றா?

டேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு

சில ஆண்டுகளுக்கு முன் டேவிட் கிரேபரின் புல்ஷிட் ஜாப்ஸ் கட்டுரையை மொழிபெயர்க்க வேண்டிவந்தபோதுதான் முதல்முறையாக கிரேபரைப் படித்தேன். இந்தக் கரோனா நாட்களின் புல்ஷிட் ஜாப்ஸ் – அர்த்தமற்ற வேலைகள் என்ற அக்கட்டுரை மீண்டும் உலகெங்கும் கவனம் பெற்ற ஒன்றானது. பல்வேறு துறைகளில் வேலை இழந்தவர்கள், வீட்டிலிருந்து வேலைசெய்ய வேண்டி வந்தவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் அல்லது தாங்கள் கனவாய் அமைத்துவைத்திருந்த பல வேலைகள் முழுமையுமே எப்படி அர்த்தமற்றவை என்பதையும், தங்கள் அலுவலக வேலைகளில் குறிப்பிடத்தகுந்த பகுதி எப்படி … Continue reading டேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு

தேர்வுகள்

நமக்கு உண்மையில் தேவையானது, ஒவ்வொரு நபரும் வளர, தங்களை வெளிப்படுத்திக்கொள்ள, தங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக நலன்களை முன்னெடுக்க அனுமதிக்கும் ஒரு அமைப்புதான்.